2.1.1 வாயுந்திரையுகளும்

நாராய்!திருமாலினிடம் நெஞ்சைப் பறி கொடுத்தாயா?

பாசுரம்:
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.




Transliteration: 
Vaayun thiraiyugaLum Kaanal Mada Naaraai
Aayum amarulagum Thunjilum Nee thunjaayaal
Noyum Payalaimaiyum Meethura VenmmepOl
Neeyum thirumaalaal Nenjam Kotpattaayaa

Translation:
White Egret of Wavy Beach, Sleepless thou art!
Unlike your mom and heavens – fallen asleep they art!!
Aren’t you too love-sick and lovelorn like me
With your heart taken by the Spouse of Lakshmi?


(White Egret – நாராய்; wavy Beach - வாயுந்திரை; Sleepless – துஞ்சா;
mom - ஆயும்; heavens – அமருலகு; love-sick – பயலைமையும்; 
lovelorn – நோயும்; Spouse of Lakshmi – திருமாலால்; )

பொழிப்புரை :
‘மேலும் மேலும் வந்து பொருந்துகிற (வாயும்) அலைகள் தாவுகின்ற (திரையுகளும்) கடற்கரைச்சோலையிலுள்ள (கானல்) மடநாராய்! என் தாயும் (ஆயும்)நித்திய சூரிகளும் (அமருலகும்) தூங்கினாலும் (துஞ்சினும்), நீ தூங்குகிறாயில்லை; ஆதலால், என்னைப் போன்று (எம்மேபோல்) நீயும், நோயும் பசலையும் சரீரமெங்கும் பரவும்படி, திருமாலால் நெஞ்சம் கொள்ளப்பட்டாயோ (கோட்பாட்டையே)? ’

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment