2.1.2 கோட்பட்டசிந்தையாய்

கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே,
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்,
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்,
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே


Transliteration:
kOtpatta chindhaiyaai koorvaaya andrilE
sEtpatta yaamangaL sEraa thiranguthiyaal
aatpatta emmEpOl neeyum araavNayaan
thaatpatta thanduzhaay thaamamkaa mutraayE

Translation:
Sharply Beaked Nightingale of conquered awareness!
Long hours of night can’t bind you to your mattress!!
Like me thou art enslaved by Serpent Couched Lord
enchanted by his feet wearing Basil Garland!!


(Nightingaleஅன்றிலே; Long – சேண்பட்ட / சேட்பட்ட; 
hours of the night – ஜாமங்கள்; bind – சேரா;
Like me - எம்மேபோல்; Lord of the Serpent Bed – அரவணையான்;
enchanted –காமுற்றாயே; Basil-herb - தண்டுழாய்;Bouquet - தாமம்)

பொழிப்புரை :

கூர்மை பொருந்திய அலகினையுடைய (கூர்வாய)அன்றிற் பறவையே (அன்றிலே)! கொள்ளப்பட்ட மனத்தினையுடையையாகி (கோட்பட்ட சிந்தையையாய்) , நீண்டு செல்லுகின்ற (சேட்பட்ட) நள்ளிரவிலும் (யாமங்கள் - ஜாமங்கள்) படுக்கையிற்சேராது வருந்துகிறாய் (இரங்குதியால்); ஆதிசேஷ சயனத்தையுடைய இறைவனது திருவடிகளிலே பொருந்தியிருக்கின்ற திருத்துழாய் மாலையினை, அடிமைப்பட்ட (ஆட்பட்ட ) யான் விரும்பியது போன்று நீயும் விரும்பினாயோ (தாமம்கா முற்றாயே)?

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment