2.1.3 காமுற்ற கையறவோ

காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்,
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த,
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே



பதம் பிரித்து:
காமுற்ற கையறவோடு எல்லே இராப்பகல்
நீமுற்றக் கண்துயிலாய் நெஞ்சுருகி ஏங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள்நயந்த
யாமுற்றது உற்றாயோ? வாழி! கனைகடலே!

Transliteration:
Kaamutra KaiaravO dellE iraappagal
nee mutrak kaNthuyilaay nenjurugi yEnguthiyEl
thee mutrath thennilagai yoottinaan thaaLnayantha
yaamutra dhutrayO vaazhi kanai kadalE

Translation:
Long Live Thy,  You Mighty Roaring Ocean!
Thou languish - day and night - sleepless with passion,
helpless - in attaining thy object of desire. Enthralled by those Feet of He who set Lanka on fire, aren't your afflictions similar to mine before?


( Roaring Ocean - கனைகடலே; All day - இராப்பகல்; Helpless -  கையறவோடு ; passion - நெஞ்சுருகி; object of desire - காமுற்ற; set fire -  ஊட்டினான்; 
Lanka of the South - தென்னிலங்கை; enthralled -  நயந்த)

பொழிப்புரை :
ஒலிக்கிற கடலே! நீ விரும்பிய பொருள் கையில் கிடைக்கப்பெறாத காரணத்தால் இரவும் பகலும் முற்றும் தூங்குகிறாய் இல்லை; அதனோடு நில்லாது, மனமும் உருகி ஏங்குகிறாய்; ஆகையால், தென்னிலங்கை முழுதினையும் நெருப்பிற்கு உணவாகக் கொடுத்த ஸ்ரீராமபிரானுடைய திருவடிகளை விரும்பிய யான் பட்ட துன்பத்தினை நீயும் பட்டாயோ? அந்தோ! துன்பு நீங்கி வாழ்ந்திடுக

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment