2.1.4 கடலும்மலையும்

கடலும்மலையும் விசும்பும் துழாயெம்போல்,
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்,
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ,
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே

பதம் பிரித்து:
கடலும் மலையும் விசும்பும் துழாய்எம்போல்
சுடர்கொள் இராப்பகல் துஞ்சாயால் தண்வாடாய்!
அடல்கொள் படைஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம்நோய் உற்றாயோ, ஊழிதோறு ஊழியே?



Transliteration:

Kadalum malaiyum visumbum thuzhayempOl,
sudarkOLiraappagal thunjnjaayaal thaNvaadaay
adalkoL padaiyaazhi ammaanaik kaaNbaan nee
udalam nOy utraayO oozhiithOrooziiyE

Translation:

O Chill wind, sleepless thy. Warm night and days gone by.
Skimming the oceans and over the hills and sky,
looking for my lord with discuss weapon - strong and feared -
did you get - age after age with no rest – sick and tired?


(Sky – விசும்பும்; Skimming – துழாய்(தல்); Warm – சுடர்கொள்
Chill Wind – தண்வாடாய்; strong and feared – அடல்கொள்;
Discuss weapon – படைஆழி; sick and tired – உடலம்நோய்;
age – ஊழி)

பொழிப்புரை: 

வடக்கிலிருந்து வருகின்ற குளிர்ந்த காற்றே! கடலும் மலையும் ஆகாயமும் ஆகிய இவற்றைத்தடவிக்கொண்டு, சந்திர சூரியர்களைக் கொண்ட இரவிலும் பகலிலும் என்னைப் போன்று தூங்குகிறாய் இல்லை; பகைவர்களுடைய மிடுக்கைக் கொள்ளுகின்ற சக்கரப்படையினையுடைய தலைவனைக் காணுவதற்கு, காலமுள்ள வரையிலும் உடலோடு முடியும்படியான நோயினைக் கொண்டாயோ?

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment