2.1.5 ஊழிதோறூழி

ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு,
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற,
வாழியவானமே, நீயும் மதுசூதன்,
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே


பதம் பிரித்து:

ஊழிதோறு ஊழி உலகுக்கு நீர்கொண்டு
தோழியரும் யாமும்போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே! நீயும் மதுசூதன்
பாழிமையிற் பட்டு அவன்கண் பாசத்தால் நைவாயே?

Transliteration: 

ozhithOroozhi ulagukku neerkOndu
thOzhiyarum yaamum pOl neeraay negizhgindra
vaazhiya vaanamE! neeyum madhusoodhan
paazhimaiyirppattu avankaN paasaththaal nayvaayE?

Translation:

Long live you cloud – who pours showers
Age after age for this universe.
As with my friends’n me – did Madhusudhan’s might
bring you tenderness to slacken and melt?


(Age – ஊழி; melt – நீராய் நெகிழ்கின்ற; cloud – வானமே;
majesty – பாழிமை; tenderness – பாசத்தால்;
slacken and melt – நைவாயே; )

பொழிப்புரை: 

உலகமெல்லாம் நிரம்பவேண்டும் நீரைக்கொண்டு காலம் உள்ளதனையும் தண்ணீர் மயமாய் இற்று விழுகின்ற மேகமே! தோழிகளையும் எம்மையும் போன்று, நீயும், மது என்னும் அரக்கனைக்கொன்ற இறைவனுடைய தோள் வலிமையில் அகப்பட்டு அவன் பக்கல் வைத்த விருப்பத்தால் வருந்துகிறாயோ? அந்தோ! இத்துன்பம் நீங்கி வாழ்ந்திடுக

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment