2.1.6 நைவாய

நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்,
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்,
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்,
மெய்வாசகம் கேட்டுன் மெய்ந்நீர்மை தோற்றாயே.



பதம் பிரித்தது:

நைவாய எம்மேபோல் நாண்மதியே! நீஇந்நாள்
மைவான் இருள்அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐவாய் அரவணைமேல் ஆழிப் பெருமானார்
மெய்வா சகம்கேட்டுஉன் மெய்ந்நீர்மை தோற்றாயே?

Transliteration:

naivaaya emmEpOl naaNmathiyE nee innaaL
maivaan iruLagatraay maazhaandhu thEmbuthiyaal
aivaay araaaNai mEl aazhip perumaanaar
meyvaasagam kEttun meineermai thOtraayO?

Translation:

Hapless Crescent Moon, akin to me you’re today,
Lifeless and failing to brighten the dark sky. 
Hasn’t the Warrior riding the snake of five hoods
Conquer your true self by speaking true words?



lifeless / charmed – மாழாந்து தேம்புதி; Warrior - ஆழிப் பெருமானார்;
five hoods – ஐவாய்; true word – மெய்வாசகம் - paronomasia to mean lies;
true nature / self – மெய்ந்நீர்மை)

பொழிப்புரை:

ஒரு கலையோடு கூடியிருக்கின்ற சந்திரனே! வருந்து தலையுடைய எம்மைப் போன்று, இக்காலத்தில் நீ ஆகாயத்திலிருக்கின்ற மிகக் கரிய இருளினைப் போக்குகின்றாய் இல்லை; ஒளியெல்லாம் மழுங்கி அழிகின்றாய்; ஆதலால், ஐந்து வாயினையுடைய பாம்பாகிய படுக்கையின்மேல் தங்கியிருக்கின்ற - சக்கரத்தைத் தரித்த - இறைவனுடைய பொய் வார்த்தையைக் கேட்டு, உன் சரீரத்திலுள்ள ஒளியை இழந்தாயோ?’ என்கிறாள்.

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment