2.1.10 வேவாரா

வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே


பதம் பிரித்தது:

வேவாரா வேட்கைநோய் மெல்லாவி உள்உலர்த்த
ஓவாது இராப்பகல் உன்பாலே வீழ்த்தொழிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்அளந்த
மூவா முதல்வா! இனிஎம்மைச் சோரேலே.

Transliteration:

vEvaaraa vetkai nOy mellaavi uLLularththa
vOvaathiraappaga lunpaalE veezhththozhindhaay
maavvayp piLandhu marudhiray pOy maNaLandha
moovaa muthalvaa ini emmaych chOrElE.

Translation:

Scorching fire of desire has made my soul parched
Day and night you made me stoop at your door!
You ripped the horse’s jaw, pierced the trees and had the earth measured,
Eternal Lord! Evade me no more!


(fire of desire – வேட்கைநோய்; parched – உலர்த்த; drop at your feet – வீழ்த்தொழிந்தாய்;
Horse – மா, (Maruthu) Trees – மருதிடை; Eternal – மூவா; Don’t Evade – சோரேலே)

பொழிப்புரை:

கேசியினது வாயைப் பிளந்து, இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து உலகத்தையெல்லாம் அளந்த, காரியத்தில் சோம்புதல் இல்லாத முதல்வனே! சில நாள் வருந்த, அதனோடு அமையாது, மேன்மேலும் வருந்தும்படி வளர்ந்துகொண்டே செல்லுகின்ற வேட்கை நோயானது மிருதுவான உயிரை உள்ளேயுள்ள பசையெல்லாம் அறும்படி உலர்த்த, இடைவிடாது எல்லாக் காலங்களிலும் உன் குணங்களைக் காட்டி, என்னை, உன்பக்கல் விழ விட்டுக்கொண்டு, நீ கடக்க நின்றாய்; இனிமேல் நான் தளரும்படி விடாதொழியவேண்டும்; என்கிறாள்

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment