2.1.11 சோராத

சோராத வெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே,
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்,
ஓராயிரம் சொன்ன அவற்றுளி வைப்பத்தும்,
சோரார் விடார்க்கண்டீர் வைகுந்தம் திண்ணெனவே


பதம் பிரித்தது:

சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓரா யிரம்சொன்ன அவற்றுள் இவைபத்தும்
சோரார் விடார்கண்டீர் வைகுந்தம் திண்ணனவே.

Transliteration:

sOraathavepporutkum aathiyaam sOthikkE
aaraatha kaadhalk kurugUrch chadagopan
Oraayiram sonna avtruLLivaip paththum
sOraar vidaark kaNdeer vaikuntham thiNNanavE!

Translation:

Out of this One thousand verses sung 
from Insatiable love of Kurugur Chatagopan
Upon the Radiant cause of everything,
mastering these ten makes one stay-put in heaven.



(Limitless – சோராத; Radiant – சோதிக்கே; insatiable – ஆராத;
One Thousand – ஓராயிரம்; mastering – சோரார்; heaven – வைகுந்தம்; stay-put – திண்ணனவே)

பொழிப்புரை:

‘ஒன்றும் ஒழியாத எல்லாப்பொருள்கட்கும் மூல காரணானான பரஞ்சோதி உருவமாய் இருக்கின்ற இறைவனுக்கு, அமையாது மேலும் மேலும் வளர்கின்ற காதலையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபாராலே அருளிச் செய்யப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் நழுவ நில்லாதவர்கள் (கற்று வல்லவர்கள்) வைகுந்தம் அடைதல் உறுதியாம்’ என்றவாறு.

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment