2.1.7 தோற்றோம்

தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்கு
எம்ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே,
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி,
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே


பதம் பிரித்தது:

தோற்றோம் மடநெஞ்சம் எம்பெருமான் நாரணற்குஎம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீநடுவே
வேற்றோர் வகையிற் கொடிதாய் எனைஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி! கனைஇருளே!

Transliteration:

ThotrOm mada nenja memberumAn naaraNarkkem
aatraamai solli yazhyvOmai nee naduvE
vEtror vagaiyil kodithaay enaiyoozhi
maatraaNmai nitriyO vaazhi kanayirulE

Translation:

Engulfing darkness! Having lost my frail heart to my Lord,
I weep and lament my unbearable lot.
Alas, you are more cruel than my worst enemy
How long will you confront me?
- May you win!


(Engulfing darkness – கனைஇருளே; frail heart – மடநெஞ்சம்; unbearable lot – ஆற்றாமை;
cruel than my worst enemy - கொடிதாய் எனைஊழி; How long will you confront me - மாற்றாண்மை நிற்றியோ)

பொழிப்புரை:

எம்பெருமானாகிய நாராயணனுக்கு எங்கள் மடநெஞ்சத்தைத் தோற்றோம்; தோற்று, எங்களுடைய ஆற்றாமையைச் சொல்லி அழுதுகொண்டிருக்கின்ற எங்களை, செறிந்த இருளே! நீ நடுவே வந்து, பகைவர்கள் தன்மையைக் காட்டிலும் கொடுமையையுடையாய் வருத்துக்கின்றாய்; காலமுள்ள வரையிலும் இக்கொடுந்தன்மையிலேயே நிற்பாயோ? கொடுந்தன்மை நீங்கி வாழ்ந்திடுக

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment