2.1.8 இருளின்

இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியே,போய்,
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
உருளும்சகடம் உதைத்தபெருமானார்,
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே.



பதம் பிரித்தது:

இருளின் திணிவண்ணம் மாநீர்க் கழியே! போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும்நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெருநசையால் ஆழாந்து நொந்தாயே?

Transliteration:

iruLin thiNivaNNam maaneersuzhiyE pOy
maruLutri raappagal thunjilum nee thunjaayaal
uruLum sagadam udhaiththa perumaanaar
aruLin perunasayaal aazhaandhu nondhaayE!

Translation:

Even Nights and Days come to their  ends
O perplexed dark Whirlpool – your toil never ends!
Greedy love for the grace of one who smote the wheel -
Is this the cause of the deep forlorn you feel?



(Dark = இருளின் திணிவண்ணம்; Whirlpool=மாநீர்க் கழியே; perplexed=மருளுற்று
toil never ends = துஞ்சாயால்; greedy love = பெருநசை; Deep=ஆழாந்து; forlorn=நொந்தாயே)

பொழிப்புரை :

இருள் செறிந்தாற்போன்று செறிந்த நிறத்தை யுடைய கரிய நீரையுடைய கழியே! மிகவும் அறிவு கெட்டு, இராப்பகல் முடிவுற்றாலும் நீ தூங்குகிறாய் இல்லை; உருண்டு வருகின்ற சகடத்தின் உருவாக அமைந்த அசுரனை உதைத்துக் கொன்ற பெருமாள் திருவருள் புரிவான் என்னும் பெருவிருப்பால் ஈடுபட்டு வருந்தினாயோ?’ என்கிறாள்.

இலக்கணம்: தரவு கொச்சகக் கலிப்பா

No comments :

Post a Comment