2.2.1 திண்ணன் வீடு

கண்ணன் கண்களே கண்கள்
திண்ணன்வீடு முதல்முழுதுமாய்,
எண்ணின்மீதிய னெம்பெருமான்,
மண்ணும்விண்ணுமெல்லா முடனுண்ட,
நங்கண்ணன் கண்ணல்ல தில்லையோர்க்கண்ணே




பதம் பிரித்தது:

திண் நன் வீடு முதல் முழுதும்ஆய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன்உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லைஓர் கண்ணே.

பொழிப்புரை:

என்றும் அழியாத பரம்பதம் முதலான எல்லா உலகங்கட்கும் உரியவனாய், எல்லையற்ற நற்குணங்களையுடையவனாய், அக்குணங்களைக் காட்டி என்னை அடிமை கொண்டவனாய், இவ்வுலகம் தெய்வ உலகம் முதலான எல்லா உலகங்களையும் ஒருசேர உண்டவனாய் உள்ள நம் கண்ணபிரானே உலகத்திற்கு எல்லாம் களைகண்; அவனை அல்லது களைகண் ஆவார் ஒருவரும் இலர்

இலக்கணம்:
கலி விருத்தம்

Transliteration:
thiNNan veedu muthal muzhuthumaay
eNNin meethiyanemperumaan
maNNum viNNum ellamudannuNda nang
kaNNanalla dhillayOrkaNNE!

Translation:

He bestows the eternal heavens and all
He transcends comprehension – My Lord!
He holds the lands and skies should deluge befall
My Kannan gives every protection I afford

(healthy / eternal– திண்; heavens - நன் வீடு; all – முழுதும்;
creates – ஆய்; transcends imagination – எண்ணின்மீதியன்;
holds the lands and skies should deluge befall - எல்லாம் உடன்உண்ட;
protection – களைகண் / கண்)

No comments :

Post a Comment