2.2.2 ஏ பாவம்

கோபால கோளரியே அருள்வார்

ஏபாவம்,பரமே, யேழுலகும்,
ஈபாவஞ்செய் தருளாலளிப்பாரார்,
மாபாவம்விட அரற்குப்பிச்சைபெய்,
கோபாலகோளரி யேறன்றியே


பதம் பிரித்தது:

ஏ பாவம்! பரமே! ஏழ் உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார்ஆர்?
மா பாவம் விட அரற்குப் பிச்சைபெய்
கோபால கோளரி ஏறு அன்றீயே?

பொழிப்புரை:

பிரமனுடைய தலையினைக் கிள்ளியதனால் உண்டான பெரிய தீவினையானது விட்டு நீங்குபடி, சிவனுக்குப் பிச்சையினைப் பெய்து அவனைக் காப்பாற்றிய, கோகுலத்திற் பிறந்தார்க்கு எல்லாம் வலிய ஆண் சிங்கத்தினை ஒத்த கிருஷ்ணனை அன்றி, உலகங்கள் ஏழிலும் உள்ள அவ்வவ்வுயிர்கள் செய்த தீவினைகளையெல்லாம் போக்கி அவற்றை அருளோடு காப்பாற்றுகின்றவர் வேறு யாவர்? ஐயோ! பாவம்! இவ்வுண்மையினைக் கூறல் நம்மைச் சார்ந்து ஆவதே!

இலக்கணம்:

கலி விருத்தம்

Transliteration:

yE paavam paramE yEzhulagum
EE paavamseytharu LaalaLippaaraar
maapaavam vidavararkkup pichchay pey,
gOpaalak kOLari yEr andriyE?

Translation:

My poor soul! Of all seven worlds
Who could waive all my sins,
as done by that Lion among cowherds
when Shiva came begging with repentance?

(My poor soul - ஏ பாவம்! பரமே!; Lion – கோளரி;
cowheards – கோபால; begging – பிச்சை)

No comments :

Post a Comment