2.2.5 தகும் சீர்

கண்ணனை உண்மையாக அறிவார் இலர்

தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,
மிகும்தேவு மெப்பொருளும்படைக்க,
தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,
மிகும்சோதி மேலறிவார்யவரே.

]

பதம் பிரித்தது:

தகும்சீர்த் தன்தனி முதலி லுள்ளே
மிகும்தேவும் எப்பொருளும் படைக்கத்
தகும்கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும்சோதி மேல்அறிவார் எவரோ?

பொழிப்புரை:

‘படைத்தல் முதலிய தொழில்களுக்குத் தக்க ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவன், தன்னுடையதாகித் தனித்த காரணமான மூலப் பகுதியினுள்ளே மேலான தேவர்களையும் மற்றும் எப்பொருள்களையும் படைக்கத் தகுதியான அழகிய தாமரை போன்ற திருக்கண்களையுடையவன், என்னை அடிமை கொண்டவன், பேரொளி உருவன் ஆன எம்பெருமானுக்கு மேம்பட்ட ஓர் இறைவன் உளன் என்று அறிகின்றவர் யாவர்? ஒருவரும் இலர்

Transliteration:

thagumseerth than thani mudhali nullE
migum thEvu meppOru Lum padaikka
thagumkOlath thaamarai kaNNan emmaan
migum sOthi mElaRi vaar yavarE?

Translation:

Does anyone know any better Beacon
than my Krishna with befitting wealth and Lotus eyes?
All the gods and everything we reckon
are broght forth as the primal one aspires!

(befitting wealth – தகும்சீர்; Lotus eye – தாமரைக்கண்; all gods – மிகும்தேவும்;
all things we reckon – எப்பொருளும்; primal one - தனி முதலி)

No comments :

Post a Comment