2.2.6 யவரும்யாவையும்

ஞானச் சுடரே பாற்கடற் பள்ளியான்

யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளியாரே



பதம் பிரித்தது:

எவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வுஇன்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர்மூர்த்தி
அவர்எம் ஆழி அம்பள்ளி யாரே
.
பொழிப்புரை:

உயர்திணையும் அஃறிணையுமான எல்லாப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று நெருக்கு உண்ணாதவாறு தன் வயிற்றில் ஒடுங்கும்படி நின்ற, பரந்து விரிந்த ஞானவெள்ளத்தினையுடைய ஒளி மிகுந்த திருமேனியையுடையவர் யாவர்? அவர்தாம், எமக்காகத் திருப்பாற் கடலில் அறிதுயில் செய்கின்றவர் ஆவர்.

Transliteration:

evaru yaavaiyu mellappOruLum
kavar vindrith thannuL Lodungga nindra
pavarkOL gnnaana veLLach chudar mUrthi
ava em Azhiyam paLLi yaarE

Translation:

Every one every thing and all beings,
Thou hold within thou with ease!
A Large Flood of Knowledge  - thou art - the God of bright things
My Discus Wielding Lord – thou sleep in peace!
(with ease – கவர்வின்றி; Large – பவர்க்கொள்)

No comments :

Post a Comment