2.2.8 கருத்தில்தேவும்

கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,
வருத்தித்தமர்யப் பிரானையன்றி,
ஆரே திருத்தித்திண்ணிலை மூவுலகும்
தம்முள் இருத்திக்காக்கு மியல்வினரே.

குரல்  ஒலி :



பதம் பிரித்தது:

கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் 1பிரான்அன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே?

பொழிப்புரை

தன் நினைவிலேயே எல்லாத் தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியமான செயல்களையுடையவனை அல்லாமல், இம்மூன்று உலகங்களையும் திருந்தச் செய்து, தனது திருவுள்ளத்தே வைத்து, ஒரு நோவும் வாராதபடி காத்து நோக்குகின்ற இயல்பினையுடையவர் வேறு யாவர்? ஒருவரும் இலர்,

Transliteration:

karuththil dEvum ellapporuLum
varuththitha maayap piraanay aNdriyaarum
thiruththith thiNNilay moovulagum thammuL
iruththik kaakkum iyalvinarE?

Translation:

By mere intent, HE brought forth and holds,
Angels and Everything, as a Conjurer,
forming the trio of stable worlds
Isn't it his nature to retain them inside and nurture?


(கருத்தில் - By mere intent; வருத்தித்த - Brought forth; இருத்தித்த - holds; தேவும் எல்லாப்பொருளும் - Angels and Everything; திண்ணிலை மூவுலகும் - trio of stable worlds; தம்முள் இருத்தி - retain them)

No comments :

Post a Comment