2.2.9 காக்குமியல்வினன்

காக்குமியல்வினன் கண்ணபெருமான்,
சேர்க்கைசெய்து தன்னுந்தியுள்ளே,
வாய்த்ததிசைமுக னிந்திரன்வானவர்,
ஆக்கினான் தெய்வவுலகுகளே.

குரல்  ஒலி :


பதம் பிரித்தது:

காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன உந்தியுள்ளே
வாய்த திசை முகன்  இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ உலகுகளே

பொழிப்புரை

எல்லா உயிர்களையும் பாதுகாத்தலையே தனக்கு இயல்பாகவுடையவன் கண்ணபிரானாகிய நம் இறைவன்; அவன், அழிக்கும் காலம் வந்தவாறே, எல்லா உயிர்களையும் தன் திருமேனியில் சேரச் செய்து, பின்னர், தனது திருநாபிக்கமலத்திலே, எல்லாக்குணங்களும் பொருந்திய பிரமனையும், இந்திரனையும், தேவர்களையும், தேவர்களுக்குரிய உலகங்களையும் உண்டாக்கினான்

Transliteration:

kaakkum iyalvinan kaNNa perumaan,
sErkkay seythuthan unthiyuLLe
vaayththa disaimugan indhiran vaanavar,
aakkinaan deyva ulagugaLE!

Translation:

My Kannan -  My habitual savior!
Collecting ‘n saving one and all inside thy belly!!
All the angels, indra and the adept creator,
Thou bring back to their heavens adroitly

Audio:



காக்கும் இயல்வினன் habitual savior
சேர்க்கைசெய்து Collecting ‘n saving
உந்தியுள்ளே inside thy belly
வாய்த திசை முகன் the adept creator
இந்திரன் வானவர் All the angels, indra
ஆக்கினான் bring back adroitly
தெய்வவுலகுகளே their heavens

No comments :

Post a Comment