2.3.01 ஊனில்வாழுயிரே

ஊனில்வா ழுயிரே  நல்லைபோ யுன்னைப்பெற்று,
வானுளார் பெருமான் மதுசூத னென்னம்மான்,
தானும்யா னுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்,
தேனும்பா லும்நெய்யும் கன்னலு மமுதுமொத்தே

குரல்  ஒலி :



பதம் பிரித்தது:

ஊனில்வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப்பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்அம்மான்
தானும்யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும்பாலும் நெய்யும் கன்னலும் அமுதும்ஒத்தே.

சரீரத்தில் வசிக்கிற மனமே! நீ மிகவும் நல்லை நல்லை! உன்னை நான் துணையாகப் பெற்ற காரணத்தால், நித்தியசூரிகட்குத் தலைவனும், மது என்னும் அரக்கனைக் கொன்றவனும், என்னை அடிமை கொண்டவனுமான இறைவனுக்கு யானும் கலந்த கலவியிலே எல்லாச் சுவைகளும் உண்டாகுமாறு, தேனும் பாலும் நெய்யும் கருப்பஞ்சாறும் அமுதுமாகிய பொருள்கள் தம்மில் கலந்தாற்போன்று கலந்தோம்.

Transliteration:

UnilvA zhuyirE nallaippO yunnaippetru
vAnuLArp perumAn madhusUdha nennammAn
thAnum yAnumellAm thannuLLE kalandhozhindhOm
thEnumpA lumneyyum kannalu mamudhumoththE.

Translation:

Soul in the flesh - so nice thou art!
Heavenly patron my Madhusudhan
With him thou mingled and turned so sweet
Like Honey with Milk, Ghee and saccharin!!

Audio:

No comments :

Post a Comment