2.3.03 அறியாக்காலத்துள்ளே

அறியாக் காலத்துள்ளே யடிமைக்க ணன்புசெய்வித்து
அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால்
அறியா மைக்குறளாய் நிலம்மாவலி! மூவடியென்று
அறியாமை வஞ்சித்தா யெனதாவி யுள்கலந்தே

குரல்  ஒலி :  



பதம் பிரித்தது:

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம்மாவலி மூவடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனதுஆவுயுள் கலந்தே.

பொழிப்புரை:

பெரிய பிராட்டியாரும் அறியாதவாறு வாமனாதாரத்தைச் செய்து, ‘மாவலி, மூவடி நிலம்’ என்று இரந்து,  அசுர குருவாகிய சுக்கிரன் கூறிய சொற்களையும் மஹாபலி அறியாதவாறு அவனை வஞ்சித்தது போன்று, என்னுடைய உயிரில் வந்து கலந்து அறியாமையினை உண்டுபண்ணுகிற மிகக்கொடிய இப்பிறவியில் அகப்பட்டிருக்கும் என்னை, ஒன்றையும் அறியாத இளமைப்பருவத்திலேயே அடிமை செய்வதில் மிகப் பெரியது ஓர் அவாவை எனக்கு உண்டாக்கி வைத்தாய்

An interesting Controversy: (ஒரு சுவையான விவாதம்)

The Eedu Vyakyaanam contains a very interesting 'controversy' with regard to this pasuram. Shri Alavandhaar - according to Thirumaalayaandan who taught the Prabanthams to Bhagavat Ramanujar - interpreted the first two lines of this pasuram to mean - "When I was in infancy with no intelect, thou imbibed in me the knowledge about my connection with thou. But alas! thou also associated me with the a Deha - which has the thri gunas and is capable of destroying that divine knowledge." Thus Sri Alavandar had assoicated this pasuram with a sense of gloom on the part of Nammazhwar. This interpretation appears to be correct  when the first two lines are read in the structural order of the poem:

அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
(You first poured love on this slave even when he was very young)

அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்
(But kept this servant in the midst of unbeknownst illusions - which are the three gunas)

( இப்பாட்டின் முன்னடிகளை அந்வயிப்பதில் அபிப்ராயபேதமுண்டு பாட்டு உள்ளபடியே அந்வயித்து (அதாவது) அறிவுநடையாடாத காலத்திலேயே எனக்குக் கைங்கர்ய ருசியைப் பிறப்பித்து (அதை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு போவதற்கு வழியில்லாதபடி) அறிவைத் தொலைப்பதான மாமாயத்திலே (ஸம்ஸாரத்திலே) பின்னையும் வைத்துக் கெடுத்தாய் என்று இழவுதோற்றச் சொல்லுகிறதாகத் திருமாலையாண்டான் உடையவர்க்கு அருளிச்செய்தார். )

However, upon hearing this vyakyanam, Sri Ramanujar felt that since both the earlier verse (2.3.2 - ஒத்தார்மிக்காரை which says that  நீ செய்தன அடியேனறியேனே and praises the boon granted by the Lord) and the following verse (2.3.4 - எனதாவியுள்கலந்தபெரு நல்லுதவி -  which also expresses similar sentiments) express a sentiment of gratitude to the Lord by Azhwar for the boons granted to him, this verse alone cannot express a gloom on the part of Azhwar.

Therefore, he suggested that the verse should be understood by differently arranging the words - as follows:

அறியா மாமாயத்து அடியேனை - அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து  வைத்தாயால்
(Upon this slave who was in the midst of unbeknownst illusions - thou poured thou affection when when he was very young)

Thus, this verse becomes congruent with the earlier one and the following one.

(இதை உடையவர் கேட்டு கீழ்ப்பாசுரங்களும் மேற்பாசுரங்களும் உவகை  தலையெடுத்துச் செல்லாநிற்க இடையே இப்பாட்டு அப்ரிதி தோற்றச் சொல்லுமது சேராது;  ஆகவே வேறுவகையாக அந்வயித்துப் பொருள்கொள்வது பாங்கு;  ‘அறியாமாமாயத்து’ என்பதை ‘வைத்தாய்’ என்பதோடு கூட்டாமல் ‘அடியேனை’ என்பதோடு கூட்டுக.  அறியாமா மாயத்தடியேனை அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்துவைத்தாய் = அறிவு கேட்டை விளைக்குமதான ப்ரக்ருதியிலே மங்கிக்கிடந்தவென்னை அறிவுநடையாடாத இளமையிலேயே அடிமையில் அன்புடையேணாம்படி செய்துவைத்தாய் என்று அர்த்தம்.  ஆகவே இதுவும் ப்ரிதிதோற்ற உபகாரத்தையே சொன்னபடி என்று நிர்வஹித்தருளினார்.)

Transliteration:

aRiyAk kAlathuLLE adimaikka Nanbuseyviththu
aRiyA mAmAyath thadiyEnai vaiththAyAl
aRiyA maikkuRaLAy nilammAvali! mUvadiyendRu
aRiyAmay vnjjiththA yenadhAvi yuLkalanthE.

Translation:

Like an infant -and spellbound- thou servant remained.
Thou poured affection upon this slave, even so!
Uttering 'Tri-Step Stretch, Bali' - Garbled as innocent lad
Thou hoodwinked the ignorant - and blended into my soul!

Audio:



பன்னிராயிரப்படி பதவுரை: (Word by word meaning as per 12000 Padi vyakyaanam)

அவதாரிகை: அநந்தரம், தன பக்கலிலே அவன் தன்னை அபிநிவேஸிப்பித்த படியை அருளிச்செய்கிறார்
அறியாமை (innocent)(பிறர் தன்னை உள்ளபடி அறியாதபடி வடிவழகாலே) மதி மயக்கின
குறளாய் (lad)வாமனனானவனாய்
நிலம் மாவலி மூவடிஎன்று (Tri-Step Stretch, Bali)நிலம் மாவலி மூவடிஎன்று (ஆநந்வித பதமாய் அபரிஸப்தமான வாக்யத்தாலே)
அறியாமை (pretended)“இவன் ஈஸ்வரன்” என்று அறிவிக்கின்ற ஸுக்ராதிகள் பாசுரமும்) நெஞ்சில் படாதபடியாக
வஞ்சித்தாய் (Bamboozled)(அவன் ‘தன்னது’ என்றிருந்த ஜகத்தை) வஞ்சித்துக்கொன்டவனே!
எனதாவியுள் கலந்து (blended with my soul)(இவ்வபதானத்தை எனக்கு பிரகாசிப்பித்தது) என்நெஞ்சுக்குள்ளே கலந்து
அறியா (innocent)அறியாமையை விளைவிப்பதாய்
மாதுஸ்தரமுடயதாய் பெருமையுடைத்ததாய்
மாயத்துமயாகார்யமான சம்சாரத்திலே
அடியேனை (child who knew nothing - thou servant)(ஸ்வதஸித்தமான சேஷத்வ சம்பந்தம் பற்றாசாக) என்னை
அறியக்காலத்துள்ளே (even so)அந்த செஷத்வமறிகைக்கு சம்பாவனையில்லாத காலத்திலே
அடிமைக்கண் (this slave)தத்பலமான தேஷத்வ வ்ருத்தியிலே
அன்பு (poured affection)ஆதரத்தை
செய்வித்துவைத்தாயால்பிறப்பித்து வைத்தாயிற்றே
இது உன்னுடைமை நழுவவிடாமைக்கிறே என்று கருத்து

No comments :

Post a Comment