2.3.4 எனதாவியுள்கலந்த

எனதாவியுள் கலந்தபெரு நல்லுதவிக் கைம்மாறு,
எனதாவி தந்தொழிந்தே னினிமீள்வ தென்பதுண்டே,
எனதாவி யாவியும்நீ பொழிலேழு முண்டவெந்தாய்,
எனதாவி யார்?யானார்? தந்தநீ கொண்டாக்கினையே.

குரல்  ஒலி :



Translation:

To repay your wondrous boon of blending into my soul
I yielded my spirit to thee, with no restitution?
O! protector of seven worlds - Thou art the spirit of my soul!
Am I myself? Who am I? Thou - the giver - hath done a restoration.

Audio:



பதம் பிரித்தது:

எனதுஆவி யுள்புகுந்த பெருநல் உதவிக்கைம்மாறு
எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வது என்பது உண்டே?
எனதாவி ஆவியும் நீ, பொழில்ஏழும் உண்டஎந்தாய்!
எனதுஆவி யார்? யான் ஆர்? தந்தநீகொண் டாக்கினையே.

பொழிப்புரை:

எழுவகைப்பட்ட உலகங்களையும் பிரளயதகாலத்தில் திருவயிற்றில் வைத்துப் பாதுகாத்த என் சுவாமியே! என் உயிருக்குள்வந்து ஒரு நீராகக் கலந்த பெரிய நல்ல உதவிக்குப் பதில் உதவியாக என் உயிரை உனக்கே உரியதாகத் தந்தேன்; தந்த பின்னர், உன்னிடத்தினின்றும் மீள்வது என்பது உளதோ? ‘இன்று'  என்றபடி,

என் உயிருக்குள் உயிராக இருப்பவனும் நீ ஆவாய்; என்னால் கொடுக்கப்பட்ட உயிர் யாருடையது? அவ்வுயிரை உனக்குக் கொடுக்கிற நான் யார்? கொடுத்த நீயே கொடுக்கப்பட்ட பொருளினை உனக்கு உரிமையாக்கிக்கொண்டாய்.

Transliteration:

enadhAviyul kalandhapperu nalludhavik kaimmARu
enadhAvi kalndhozhindhE ninimILva thenbathundO
enathAvi Aviyum nI pozhilEzhu munda venthAy
enathAvi yAr?yAnAr? thanthanI kondAkkinayE.

பன்னிராயிரப்படி பதவுரை: (Word by word meaning as per 12000 Padi vyakyaanam)

அவதாரிகை:நாலாம் பாட்டில் – தமக்கு அவன் பண்ணின உபகாரத்துக்கு பிரத்யுபகரம் காணாதே தடுமாறுகிறார்.
எனதாவி (my soul)அனாதிகாலம் சம்சாரத்தில் வாசனை பண்ணிப்போந்த என்னோடு கிடீர் கிடந்தது! வசிஷ்டன் சண்டாள ஸ்ரேணியிலே புகுந்தாற்ப்போலே தம்மை அனுசந்திக்கிறார்.
உள்கலந்த (blending into ..)அபிமத விஷயத்தில் அழுக்குகக்கும் செருக்கரைப்போலே, அதுவே ஹெதுவாகத் தன் பேறாகக் கலந்தான். “தன்னுள்ளே கலந்தொழிந்தோம்” என்கிறபடியே கலந்தபடி.
பெருநல்லுதவி (boon or great boon)அதாவது தன் பேறாக உபசரிக்கை
கைம்மாறு (to repay)கைம்மாறாக. பிரத்யுபகாரம்  பண்ணியல்லாது தரிக்கவொண்ணாதபடி
எனதாவி தந்தொழிந்தேன் (yielded my spirit into thee)நீ உன்னை எனக்காக்குகையலே வெளிறுகழிந்த என் ஆத்மாவைத் தந்தேன்’ “நெடுநாள் இழிந்தவராகையாலே இவர் திரிய நிற்கும்” என்று கொண்டு “இது எத்தனை குளிக்கு நிற்கும்?” என்ன
இனி மீள்வதென்பது உண்டே (with no restitution)ஸத்யோ தஸாஹமாஹத் தந்தேன் “மீள்வு” என்று ஒரு அர்த்தந்தானுமுண்டோ? “இவரை பாமத்தொடே விடுகிறதென்?” என்று “யார் பொருளை யாருக்குக் கொடுத்தீர்?” என்ன
எனதாவியாவியும் நீ (thou art the spirit of my soul)என் ஆத்மாவுக்கு அந்தராத்மாவாக நிற்கிறாய் நீ. இது உனக்கு அநந்யார்ஹசேஷமன்றோ?
பொழிலேழும் உண்ட எந்தாய்(O! protector of sever worlds - during deluge by retaining the seven worlds in his stomach)பிரளயார்ணவத்தில் நஸியாதபடி ஜகத்தை ரக்ஷித்தார்ப்போலே நான் பிரிந்து நோவுபடாதபடி என்னோடே கலந்து அடிமைகொன்டவனே! பிரளயங்கோள்ளாமே நோக்குகையாலும் நீயே ஸ்வாமி என்னவுமாம்.
எனதாவியார் யானார் (Am I myself? Who am I?)“எனதாவி” என பிரத்தேய வஸ்துவான நான் ஆர்? “தந்தொழிந்தேன்” என்று பிரதாதாவான நான் ஆர்?
தந்த நீ கொண்டாக்கினியே (Thou - the giver - hath done a restoration)“நீரென்று ஒருத்தரில்லையோ? பல போக்தாக்கள் நீரல்லீரோ?” என்ன; உன்னுடைய வஸ்துவை நீயே கொண்டபின்பு நித்தியமான ஆத்மாவை இவன் தருகை யாவதென்” என்னில் ஸத்தை அவன் இச்சாதீனமாகையாலே “தந்தான்” என்கிறது (“இச்சாத ஏவ பத விஸ்வபதார்த்த ஸத்தா”)

A bit of interesting reflection on this verse: (இந்த பாசுரம் குறித்து ஓர் சுவையான விவாதம்)

In this paasuram, Azhwar appears to reflect two conflicting sentiments - In the first two lines he says that in return for the great boon from the Lord of blending with his soul, he has "yielded" his soul to the Lord with no scope for redeeming it.

However, in the last two lines, he expresses his own shame at submitting to the Lord as his "repayment" only what is already his property - i.e. his soul -like all souls in this world - is nothing but the Lord's own property. Who is he to give back what already belongs to the Lord?

No comments :

Post a Comment