2.5.2 திருவுடம்பு வான்சுடர் - Presence like the sun

திருவுடம்புவான்சுடர் செந்தாமரைகண்கைகமலம்,
திருவிடமேமார்வ மயனிடமேகொப்பூழ்,
ஒருவிடமுமெந்தை பெருமாற்கரனேயோ,
ஒருவிடமொன்றின்றி யென்னுள்கலந்தானுக்கே

Audio Introduction: 


Translation (done by Late Mr. PS. Desikan):

His body like the sun, eyes like a lotus petal
with the Lady in His chest and Brahma over navel,
in our lord father-like, Haran filling up the residual
and with no more space left, He dissolved in me full

பதம் பிரித்தது:

திரு உடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்
திரு இடமே மார்வம் அயன் இடமே கொப்பூழ்
ஒருவு இடமும் எந்தை பெருமாற்கு அரனே ஓ
ஒருவு இடம் ஒன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே

Transliteration:

thiruvudampuvaan _sudar* sendhaamaraikaN kaikamalam,*
thiruvidamE maarbam* ayanidamEkoppooz,*
oruvidamum* endhai perumaaRku aranEyO,*
oruvidam onRinRi* ennuLkalandhaanukkE.

பொழிப்புரை:
வெற்றிடம் சிறிதும் இல்லாதபடி என்னுள் கலந்தவனான எந்தை பெருமானுக்கு அழகிய திருமேனி சூரியனைப் போன்று இருக்கின்றது; திருக்கண்கள் செந்தாமரை போன்று இருக்கின்றன; திருமகளுக்கு இருப்பிடம் திருமார்பாகும்; பிரமனுடைய இடம் திரு உந்தித்தாமரையாகும்; ஒழிந்த மற்றை இடம் சிவன் இருக்கும் இடமாகும்.

 விளக்கம் :

வான் சுடர் -சூரியன்; மிக்க ஒளியுமாம்.
ஒருவுதல்-நீக்குதல்.
‘ஒன்று’ என்பது, ‘சிறிது’ என்னும் பொருட்டாய் நின்றது.
ஓகாரம், சிறப்புப் பொருளில் வந்தது.
கலந்தான் - வினையாலணையும் பெயர்.

No comments :

Post a Comment