2.5.3 என்னுள் கலந்தவன் - One who fused into me

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள்கலவாத்து தெப்பொருளும்தானிலையே

Audio Introduction: 




Translation (done by Late Mr. PS. Desikan):

Fused into me Himself like a shiny mount colossus
His lips, eyes, arms and feet gleaming as lotus
Holding the seven worlds in His stomach enormous
with nothing left anywhere undissolved in His campus

பதம் பிரித்தது:

என்னுள் கலந்தவன் செங்கனி வாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னும் முழு ஏழ் உலகும் வயிற்றின் உள
தன்னுள் கலவாதது எப் பொருளும் தான் இலையே

Transliteration:

ennuLkalandhavan* chenganivaaychengamalam,*
minnum chudar malaikku* kaNpaathamkaikamalam,*
mannumuzuvEz ulakum* vayiRRinuLa,*
thannuLkalavaathathu* epporuLumthaanilaiyE.

பொழிப்புரை:

‘என்னுள் வந்து கலந்தவனாகி மின்னுகின்ற ஒளி மயமான மலை போன்ற இறைவனுக்கு, சிவந்து கனிந்த திருவதரம் செந்தாமரையைப் போன்றதாகும்; திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும் தாமரை மலர்களேயாம்; நிலைபெற்ற பதினான்கு உலகங்களும் திருவயிற்றிலே உள்ளன; ஆதலால், இறைவனாகிய தனக்குள் கலவா தனவாகிய எப்பொருள்களும் இல்லை

விளக்கம்:

உலகு -இடவாகுபெயர்.
மலை என்றது, உருவகம்.
மூன்றாம் அடியில் ‘வயிற்றின் உள’ என உடன்பாட்டாற்கூறிய அதனை நான்காமடியில் கலவாதது எப்பொருளும் தான் இலையே’ என எதிர் மறை முகத்தால் அருளிச்செய்கிறார். ‘கலவாத அது எப்பொருளும்’ என்பது ஒருமையோடு பன்மை மயங்கி வந்தது.

No comments :

Post a Comment