2.5.4 எப்பொருளும்தானாய் - Nectar Unsatiated

எப்பொருளும்தானாய் மரகதக்குன்றமொக்கும்,
அப்பொழுதைத்தாமரைப்பூக் கண்பாதம்கைகமலம்,
எப்பொழுதும்நாள்திங்க ளாண்டூழியூழிதொறும்,
அப்பொழுதைக்கப்பொழு தென்னாராவமுதமே

Audio Introduction: 


Translation (done by Late Mr. PS. Desikan):

Resting omnipresent in me like a huge emerald hill
as just-bloomed lotus those eyes, hands and feet swell!
Days, months, years, why aeons after aeons as a jewel
time in and time out as nectar unsatiated, me, He thrills

பதம் பிரித்தது:

எப் பொருளும் தான் ஆய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப்பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டு ஊழி ஊழிதொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா அமுதமே

Transliteration:

epporuLum thaanaay* marathakak kunRamokkum,*
appozuthaiththaamaraippook* kaNpaatham gaikamalam,*
eppozuthum _naaLthingaL* aandu ooziyoozithoRum,*
appozuthaik appozuthu* ennaaraavamuthamE.

பொழிப்புரை:

எத்துணைச் சிறிய நேரமும் நாளும் மாதமும் வருடமும் ஊழி ஊழிகள்தோறும் அவ்வக்காலங்களில் எனக்குத் தெவிட்டாத அமுதமாய் இருக்கின்ற இறைவன், எல்லாப் பொருள்களும் தனக்குள் அடங்கப் பெற்றவனாய் மரகதமலையினை ஒத்திருக்கிறான்; அவனுடைய திருக்கண்கள் அப்பொழுது மலர்ந்த தாமரைப்பூவினை ஒத்திருக்கின்றன; திருவடிகளும் அப்பொழுது மலர்ந்த தாமரைகள் ஆவனவாம்.

விளக்கம்:

ஆரா அமுதம் குன்றம் ஒக்கும்’ என்க. அமுதம் சொல்லால் அஃறிணையாதலின், ‘ஒக்கும்’ என்கிறார்.

No comments :

Post a Comment