2.5.5 ஆரா அமுதமாய் - Ambrosia

ஆராவமுதமா யல்லாவியுள்கலந்த,
காரார்க்கருமுகில்போ லென்னம்மான்கண்ணனுக்கு,
நேராவாய்செம்பவளம் கண்பாதம்கைகமலம்,
பேராரநீண்முடிநாண் பின்னுமிழைபலவே.

Audio Introduction: 


Translation (done by Late Mr. PS. Desikan):

Kannan, my lord like dark clouds, His lips coral red
with eyes, feet and arms like a lotus flower-bud
His long tress bejeweled and waistline with a thread
Merged He in me as ambrosia, my soul fully filled.

பதம் பிரித்தது:

ஆரா அமுதமாய் அல் ஆவியுள் கலந்த
கார் ஆர் கருமுகில் போல் என் அம்மான் கண்ணனுக்கு
நேரா வாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேர் ஆரம் நீள் முடி நாண் பின்னும் இழை பலவே

Transliteration:

aaraavamuthamaay* allaaviyuLkalandha,*
kaaraar karumukilpOl* ennammaan _kaNNanukku,*
nEraavaay sempavaLam* kaNpaatham kaikamalam,*
pEraara _nIL mudi_naaN* pinnum izaipalavE.

பொழிப்புரை:

உண்ணத் தெவிட்டாத அமுதமாய், ஒரு பொருளாக மதிஅத்தற்குத் தகுதி இல்லாத என்னுடைய உயிருள் கலந்த, கார் காலத்தில் எழுகின்ற கரியமேகம் போன்ற என் தலைவனாகிய கண்ணபிரானுடைய திருஅதரத்தினைச் செம்பவளம் ஒப்பாகமாட்டது; திருக்கண்கள் திருவடிகள் திருக்கரங்களாகிய இவற்றைத் தாமரை மலர்கள் ஒப்பாகமாட்டா; பெரிய ஆரமும் நீண்ட திருமுடியும் அரைநாணும் மற்றுமுள்ள ஆபரணங்களும் மேலும் பலபலவேயாய் இருக்கின்றன

விளக்கம்:

கார் கருமை; காலத்திற்கு ஆயிற்று; இருமடியாகு பெயர். கண்ணனுக்கு -ஆறாம் வேற்றுமையில் நான்காவது மயங்கிய மயக்கம். ‘நேரா’ என்னும் பன்மைப்பயனிலைக்கு, பவளம் கமலம்.

No comments :

Post a Comment