2.5.8 பொன்முடியம் - The golden crowned

பொன்முடியம் போரேற்றை யெம்மானைநால்தடந்தோள்,
தன்முடிவொன்றில்லாத தண்டுழாய்மாலையனை,
என்முடிவுகாணாதே யென்னுள் கலந்தானை,
சொல்முடிவுகாணேன்நான் சொல்லுவதென்சொல்லீரே.

Audio Introduction: 


Translation (done by Late Mr. PS. Desikan):

A roaring lion golden crowned, four shoulders each a like mound
eternally manifesting Himself with tulasi garland worn around
Merged He in me caring so little for my lowly background!
To describe Him how, I wonder, looking for words and sound!

பதம் பிரித்தது:

பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவு ஒன்று இல்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல்முடிவு காணேன் நான் சொல்லுவது என்? சொல்லீரே

Transliteration:

ponmudiyam pOrERRai* emmaanai _naalthadandhOL,*
thanmudi onRillaatha* than thuzaay maalaiyanai,*
enmudivu kaaNaathE* ennuL kalandhaanai,*
chol mudivu kaaNEn_naan* cholluvathu en _chollIrE.

பொழிப்புரை:

பொன் மயமான திருமுடியை யுடையனாய் அழகிய போரேறு போன்றவனாய் எனக்கு நாதனாய் நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய் தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனாய் எனது தாழ்வைக் கணிசியாமல் என்னோடு கலவி செய்தவனுமான பெருமானை நான் சொல்லி முடிக்கும் வகையறிகின்றிலேன்! என்னவென்று சொல்லலாம்!நீங்களே சொல்லுங்கள்

No comments :

Post a Comment